பீகார்: பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் - 4 பேர் படுகாயம்


பீகார்: பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் - 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Oct 2021 8:29 PM GMT (Updated: 22 Oct 2021 8:29 PM GMT)

பீகாரில் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் கட்டக் மாவட்டம் ரடபடா கிராமத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் 3 பேரை கடத்தல் வழக்கில் நரசிங்கப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் நேற்று நரசிங்கப்பூர் காவல்நிலையத்தில் குவிந்தனர். மேலும், கைது செய்யப்பட்ட தங்கள் கட்சி நிர்வாகிகள் 3 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது. பாஜகவினர் போலீசார் மீது கற்கலை வீசி தாக்குதல் நடத்தினர். 

இதனை தொடர்ந்து தடியடி நடத்திய போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தில் 3 போலீசார் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story