தேசிய செய்திகள்

இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம் + "||" + Congress asks PM to end 'silence' on Chinese 'intrusion' in Arunchal Pradesh

இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம்

இந்திய பகுதிக்குள் சீனா உருவாக்கும் கிராமம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்..? காங்கிரஸ் கண்டனம்
அருணாசலபிரதேசத்தில் சீனா உருவாக்கும் 2-வது கிராமம் தொடர்பாக மோடி மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

அருணாசலபிரதேசத்தில் இந்திய பகுதிக்குள் சீனா 2-வது கிராமத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது:- இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பிரதமர் மோடி உறுதியானவராக, நேர்மையானவராக, வெளிப்படையானவராக இருக்க வேண்டும். ஆனால் அவர் மவுனம் சாதித்து வருகிறார். அவரது மவுனத்தை நாங்கள் கண்டிக்கிறோம். இது மன்னிக்கக்கூடியது அல்ல.

தேசிய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதிக்கும் இந்த பிரச்சினையில் இருந்து திசைதிருப்ப திட்டமிட்ட வேலை நடக்கிறது. இப்பிரச்சினைக்கு மோடி உடனடியாக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
பஞ்சாப் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2. மாயமான அருணாச்சலப்பிரதேச சிறுவன் சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்
காணாமல் போன சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
3. சீனாவில் கொரோனா பரவல்; 3 நகரங்களில் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக சீனாவில் இதுவரை 3 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
4. அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மேலும் ஒரு நகருக்கு பூட்டு
அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக சீனாவில் மேலும் ஒரு நகரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
5. 3 பேருக்கு கொரோனா 10 லட்சம் மக்களுக்கு முழு ஊரடங்கு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 3 பேர் பாதிக்கபட்ட சீனா நகரில் 10 லட்சம் பேருக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.