ஒடிசா: ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Nov 2021 7:58 PM GMT (Updated: 2021-11-26T01:28:37+05:30)

ஒரே மருத்துவ கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஸ்வர், 

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் வீர சுரேந்திர சாய் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு படித்து வரும் மாணவர்களில் 22 பேருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று ஏற்பட்டது. புதன்கிழமை, இது 34 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில், நேற்று மேலும் 20 பேருக்கு தொற்று உறுதியானதால், இந்த எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது. அவர்கள் அதே ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆண்டு விழா காரணமாக, தொற்று பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது, நேரடி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story