தேசிய செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் + "||" + Powerful earthquake on India Myanmar border

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திஸ்பூர்,

இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 6.1 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தென்கிழக்கில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் இந்த நிலநடுக்கம் காரணமாக மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
போதுமான கையிருப்பு இருப்பதால், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை வணிக நோக்கத்துடன் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
2. முதல்முறையாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களே எண்ணிக்கையில் அதிகம்...!! ஆய்வில் தகவல்
இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்ப்பு
இந்திய அணியில் ஷ்ரயாஸ் அய்யர் 75 ரன்களும் ,ஜடேஜா 50 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் .
4. இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா சிறப்பான தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரையிலான ஆட்டத்தில் இந்திய அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: கான்பூரில் நாளை தொடங்குகிறது
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கான்பூரில் நாளை தொடங்குகிறது.