தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு + "||" + West Bengal: Express train overturns - death toll rises to 6

மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மேற்கு வங்காளம்: விரைவு ரெயில் கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
மேற்கு வங்காளத்தில் கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கொல்கத்தா,

ராஜஸ்தானிலிருந்து அசாம் நோக்கிச் சென்ற கவுகாத்தி- பிகேனிர் விரைவு ரெயில் மேற்கு வங்க மாநிலத்தின் தோமாஹானி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ரெயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

அதிகாரிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  ரெயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்றது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும்  20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பிரதமர் மோடியுடன் பேசி, மீட்புப் பணிகள் குறித்த நிலைமையை விவரித்துள்ளதாகவும் விரைவான மீட்புப் பணிகளுக்கான நிலைமையை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது. மேலும்  சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளது. 

இந்த நிலையில் தற்போது இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 36 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் கவுகாத்தி செல்வதற்கு சிறப்பு ரெயில் ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜான் பர்லா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம்: சாலை விபத்தில் 18 பேர் பலி
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2. முதல்வருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகை கைது
திரிபுரா முதலமைச்சருக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நடிகையும் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
3. ஒரே நேரத்தில் 4 இளம்பெண்களுடன் காதல்... ஒன்றாக வந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி
இளைஞரின் நான்கு பெண் தோழிகள் ஒன்றாக வந்துள்ளனர். இதனைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
4. மே.வங்காளத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்; மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
5. ஆப்கானிஸ்தானில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 200 பேர் சிக்கி தவிப்பு: முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 150 பேர் இந்திய விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர்.