தேசிய செய்திகள்

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!! + "||" + India adds 3.33 lakh new cases, 525 deaths reported in last 24 hours

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு..!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 ஆக சரிவை சந்தித்தது. 

இந்நிலையில் மேலும் குறைந்த அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட 4,171 குறைவாகும்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,59,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 21,87,205 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,61,92,84,270 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71,10,445 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 18,75,533 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 71,53,75,425  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் சேவையை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
2. இந்தியாவில் அசைவ உணவுகளை அதிகம் விரும்பும் ஆண்கள் - புள்ளி விவரங்களில் தகவல்
இந்தியாவில் ஆண்கள் அதிக அளவில் அசைவ உணவுகளை விரும்பி உண்பது தேசிய குடும்ப ஆரோக்கிய அமைப்பின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.
3. தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா; 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
5. இந்தியா ஏற்றுமதிக்கு விதித்த தடை எதிரொலி: உலக அளவில் உச்சம் தொட்டது கோதுமை விலை
இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, உலக அளவில் கோதுமை விலை உச்சம் தொட்டுள்ளது.