Normal
டெல்லி: சவுதி அரேபியாவில் இருந்து 1.6 கிலோ தங்கம் கடத்தியதாக 3 பேர் கைது
76 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தியதாக டெல்லி விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவர் 1.6 கிலோ எடையுள்ள 14 தங்கக் கட்டிகளை விமான நிலைய சுகாதார பணியில் ஈடுபடும் இரண்டு ஊழியர்களிடம் ஒப்படைத்தபோது அவர் பிடிபட்டார் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், 76.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தங்கக்கட்டிகளை வாங்க முற்பட்ட இரண்டு ஒப்பந்த ஊழியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாளவும், பயணிகளை பரிசோதிக்கவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story