7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி


7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் பாஜக அபார வெற்றி
x

உத்தரபிரதேசம், பீகார் உள்பட 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் காலியாக இருந்த அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகாமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), தாம்நகர் (ஒடிசா), கோலகோகர்நாத் (உத்தர பிரதேசம்) மற்றும் முனோகோடே (தெலுங்கானா) ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்தலில் முனோகோடே தொகுதியில அதிகபட்சம் 77 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அந்தேரி கிழக்கில் தான் மிகக்குறைவாக 35 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பதிவாகின. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி,

பீகாரின் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் நீலம் தேவி தொடக்க சுற்று வாக்கு எண்ணிக்கை முதல், தொடர்ந்து முன்னிலை வகித்தபடியே காணப்பட்டார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிக வாக்குகளை பெற்று 16,741 வாக்குகள் வித்தியாசத்தில் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். நீலம் தேவி 79,744 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சோனம் தேவி 63,003 வாக்குகள் பெற்றுள்ளார்.

பீகாரில் கோபால்கஞ்ச் தொகுதியில் பாஜக வேட்பாளர் குசும்தேவி 70,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய் வெற்றி பெற்றுள்ளார். உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் அமன்கிரி 1,24,810 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். லக்னோவில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு பாஜக உறுப்பினர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


Next Story