கொல்கத்தாவைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ய இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் பெண்..!


கொல்கத்தாவைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ய இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் பெண்..!
x

நீண்ட முயற்சிக்குப் பிறகு ஜாவேரியா இந்தியாவுக்கு வர 45 நாட்கள் விசா கிடைத்துள்ளது.

சண்டிகர்,

பாகிஸ்தானின் கராச்சி பகுதியைச் சேர்ந்த ஜாவேரியா கானும் என்ற பெண்ணும், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த சமீர் கான் என்ற நபரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு, விசா ரத்து உள்ளிட்ட காரணங்களால் பலமுறை தடைபட்டுள்ளது.

இந்நிலையில் நீண்ட முயற்சிக்குப் பிறகு ஜாவேரியா இந்தியாவுக்கு வர 45 நாட்கள் விசா கிடைத்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் மாவட்டத்தில் உள்ள அட்டாரி எல்லை வழியாக ஜாவேரியா இந்திய எல்லைக்கு வந்தார். அவரை சமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் மேள தாளத்துடன் வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாவேரியா, "எனக்கு 45 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது. நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு நிறைய அன்பைப் பெறுகிறேன். ஜனவரி முதல் வாரத்தில் எங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்" என்று கூறினார்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு சமீர் கானின் திருமணத்திற்காக அவரது பெற்றோர் பெண் பார்க்க தொடங்கியபோது, ஜாவேரியாவின் புகைப்படம் வந்துள்ளது. அதைப் பார்த்த உடனேயே சமீர் கான், ஜாவேரியாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 5 ஆண்டுகள் கழித்து, பல்வேறு தடைகளை தாண்டி இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story