ஆந்திரா: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை


ஆந்திரா: ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் - பக்தர்களுக்கு எச்சரிக்கை
x

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை எச்சரித்துள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த கோவில் அமைந்துள்ள நிலையில், சில நாட்களுக்கு முன் சத்திரங்கள் அமைந்துள்ள பகுதி அருகே சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் அதே பகுதியில் அமைந்துள்ள ரெட்டியார் சத்திரம் அருகே சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




Next Story