அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா - பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்


அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் ராணா கோஸ்வாமி ராஜினாமா - பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்
x

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் ராணா கோஸ்வாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஸ்பூர்,

அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஜோர்ஹாட் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராணா கோஸ்வாமி, இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ராணா கோஸ்வாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும், தொடர்ந்து பா.ஜ.க.வில் அவர் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், "ராணா கோஸ்வாமி காங்கிரஸ் கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் ஆவார். அவர் பா.ஜ.க.வில் இணைவது குறித்து எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் பா.ஜ.க.வில் இணைந்தால் அதை நான் வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story