அசாமில் மோசமான வானிலை: திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்கள்
அசாமில் மோசமான வானிலை காரணமாக 2 விமானங்கள் திரிபுராவுக்கு திருப்பி விடப்பட்டன.
கவுகாத்தி,
தலைநகர் டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகர் நகருக்கு இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானம் திப்ருகரில் உள்ள மோகன்பரி விமான நிலையத்தில் தரையிறங்க சென்றபோது அங்கு நிலவிய மோசமான வானிலையால் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் 15 நிமிடங்களுக்கும் மேலாக விமானம் வானில் வட்டமிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகும் வானிலை சீரடையாததால் அந்த விமானம் திரிபுரா தலைநகர் அகர்தலாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அதேபோல் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து திப்ருகர் வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் மோசமான வானிலையால் தரையிறங்க முடியாமல் சுமார் 15 நிமிடம் வானில் வட்டமிட்ட பிறகு, அகர்தலாவுக்கு திருப்பிவிடப்பட்டது.
Related Tags :
Next Story