பெங்களூரு-பெலகாவி இடையே தினசரி விமான சேவை


பெங்களூரு-பெலகாவி இடையே தினசரி விமான சேவை
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM GMT (Updated: 31 Oct 2022 6:46 PM GMT)

பெங்களூரு-பெலகாவி இடையே தினசரி விமான சேவை தொடங்கியது.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து பெலகாவிக்கு தினசரி விமான சேவையை இண்டிகோ விமானம் தொடங்கி உள்ளது. இதுகுறித்து விமான நிறுவனம் சார்பில் கூறியதாவது:-

பெங்களூரு-பெலகாவி இடையே நேற்று முன்தினம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த விமானம் தினசரி என்ற முறையில் இயக்கப்பட உள்ளது. பெங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு பெலகாவியை சென்றடையும். மறுமார்க்கமாக காலை 11.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.35 மணியளவில் மீண்டும் பெங்களூருவுக்கு வந்து சேரும். மாலை பெங்களூருவில் இருந்து புறப்படும் விமானம் பெலகாவிக்கு இரவு 7.10 மணிக்கு சென்றடையும்.

இவ்வாறு அந்த நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.


Next Story