குஜராத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்
காங். கட்சி எம்.எல்.ஏ. மோகன்சிங் ராத்வா என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆமதாபாத்,
குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங். கட்சி எம்.எல்.ஏ. மோகன்சிங் ராத்வா என்பவர் அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குஜராத் சட்டசபைக்கு வரும் டிச.1 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கிறது.
இங்கு ஆளும் பா.ஜ., காங்., மற்றும் ஆம் ஆத்மி என மும்முனை போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் காங். கட்சியைச் சேர்ந்தவரும் 10 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற மூத்த தலைவர் மோகன்சிங் ராத்வா, என்பவர் இன்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் பா.ஜ.வில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story