பா.ஜ.க.வின் வெற்றியில் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை; தேர்தலுக்கு முன்பே வந்த அழைப்புகள் - பிரதமர் மோடி பேச்சு


பா.ஜ.க.வின் வெற்றியில் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை; தேர்தலுக்கு முன்பே வந்த அழைப்புகள் - பிரதமர்  மோடி பேச்சு
x

பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்பதில் சர்வதேச நாடுகள் முழு நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் வெற்றியில் சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;-

"தேர்தல்கள் இன்னும் நடக்கவில்லை, ஆனால் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிநாடு செல்ல சர்வதேச அரசுகளிடம் இருந்து எனக்கு ஏற்கனவே அழைப்புகள் உள்ளன. இது எதைக் குறிக்கிறது? பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறும் என்பதில் சர்வதேச நாடுகள் முழு நம்பிக்கையுடன் உள்ளன.

மூன்றாவது முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது பதவியை அனுபவிப்பதற்காக அல்ல, தேசத்திற்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான். என்னுடைய வீட்டைப் பற்றி நான் நினைத்திருந்தால் கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்க முடியாது.

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் புதிய உயரங்களை எட்டியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அடுத்த 5 ஆண்டுகள் முக்கியப் பங்கு வகிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா முன்பை விட மிக வேகமாக செயல்பட வேண்டும்."

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story