நிலம் விற்க பெற்ற முன்பணத்தில் பங்கு தராததால் இடைத்தரகரை கொன்ற விவசாயி


நிலம் விற்க பெற்ற முன்பணத்தில் பங்கு தராததால் இடைத்தரகரை கொன்ற விவசாயி
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரே அருகே தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை விற்க பெற்ற முன்பணத்தில் தனக்கு பங்கு தராததால் இடைத்தரகரை விவசாயி ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். மேலும் அதை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையையும் அரிவாளால் வெட்டினார்.

சிக்கமகளூரு:

மூடிகெரே அருகே தனது தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை விற்க பெற்ற முன்பணத்தில் தனக்கு பங்கு தராததால் இடைத்தரகரை விவசாயி ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். மேலும் அதை தடுக்க வந்த தாய் மற்றும் தந்தையையும் அரிவாளால் வெட்டினார்.

காபி தோட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே உள்ள மதுகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் கவுடா(வயது 70). இவரது மனைவி பிரேமா(62). இந்த தம்பதியின் மகன்கள் சிவு(41) மற்றும் சந்தோஷ்(40). இவா்கள் விவசாயம் செய்து வருகிறாா்கள். இந்தநிலையில் பாஸ்கர்கவுடா தனக்கு சொந்தமான காபி தோட்டத்தை பெங்களூருவை சேர்ந்த ஒருவருக்கு, இடைத்தரகர் கார்த்திக் என்பவர் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்பணமாக ரூ.12 லட்சத்தை கார்த்திக், பாஸ்கர்கவுடாவிடம் கொடுத்துள்ளார். பின்பு அந்த பணத்தை பாஸ்கர் கவுடாவின் கையாலேயே அவரது மூத்த மகன் சிவுவிடம் ஒப்படைத்தார்.

வாக்குவாதம்

இதுபற்றி அறிந்த பாஸ்கர் கவுடாவின் 2-வது மகன் சந்தோஷ் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அவர், கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்துள்ளார். கார்த்திக் அங்கு சென்று பாஸ்கர்கவுடாவிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்தோஷ், நிலத்தை விற்கும் முன்பணத்தில் எனக்கு பங்கு கொடுக்காமல் அண்ணனிடம் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்டு பாஸ்கர் கவுடாவிடம், இடைத்தரகர் கார்த்திக்கிடமும் தகராறு செய்தார்.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இந்தநிலையில் சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இடைத்தரகர் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த பாஸ்கர்கவுடா மற்றும் பிரேமா மீதும் சில இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேேய உயிரிழந்தார்.

போலீசில் சரண்

அப்போது அங்கு வந்த சிவு, தனது பெற்றோரை மீட்டு மங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்பு, சந்தோஷ் கொலை செய்ததாக கூறி பாகலூர் போலீசில் சரணடைந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தோசை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story