பி.எல்.சந்தோஷ் சிறைக்கு செல்வது உறுதி; காங்கிரஸ் சொல்கிறது


பி.எல்.சந்தோஷ் சிறைக்கு செல்வது உறுதி; காங்கிரஸ் சொல்கிறது
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

பி.எல்.சந்தோஷ் சிறைக்கு செல்வது உறுதி என காங்கிரஸ் சொல்கிறது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மூன்றும் விட்டவர்கள் ஊருக்கு பெரியவர்கள் என்ற பழமொழி உண்டு. கலாசாரம், பண்பாடு குறித்து சொற்பொழிவாற்றும் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் என்பவரின் உண்மையான வேலை ஜனநாயகத்தின் கண்ணியத்தை குலைப்பது ஆகும். தெலுங்கானாவில் ஆபரேஷன் தாமரை மூலம் அங்குள்ள ஆட்சியை கவிழ்க்க சதி செய்தனர். அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பி.எல்.சந்தோஷ் சிறைக்கு செல்வது உறுதி.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Next Story