இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகம்; ரஷியாவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம்பிடித்த சவுதி அரேபியா


இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகம்; ரஷியாவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம்பிடித்த சவுதி அரேபியா
x

Image Courtesy: AFP

இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் சவுதி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்கு தள்ளி சவுதி அரேபியா 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

உலகின் 3-வது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து ஒரு நாளைக்கு 8 லட்சத்து 63 ஆயிரத்து 950 பேரல்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய மாதத்தை விட 4.8% அதிகமாகும்.

அதே நேரத்தில் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக உள்ளது.


Next Story