மகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு திரும்பியபோது ஆனந்த கண்ணீர் சிந்திய தந்தை - நெகிழ்ச்சி வீடியோ
மகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு திரும்பியபோது தந்த ஆனந்த கண்ணீர் சிந்தும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி,
டெல்லியை சேர்ந்த நபர் தனது மகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு திரும்பியபோது ஆனந்த கண்ணீர் சிந்திய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பிரிக்ஷா புதிய கல்லூரியில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் சேர்வதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் பிரிக்ஷா ஆட்டோவில் சென்றுள்ளார்.
அப்போது, தனது மகளை கல்லூரியில் விடுவதை எண்ணி பிரிக்ஷாவின் தந்தை கண்ணீர் சிந்துகிறார். பிரிக்ஷாவின் தந்தையுடன் சேர்ந்து தாயும் சற்று மன கலங்கிய நிலையில் பின்னர் தனது கணவரை சமாதனபடுத்துகிறார். இதை, வீடியோவாக எடுத்த பிரிக்ஷா தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. மேலும், இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story