இந்து மத வழிபாட்டு தலத்தில் சினிமா பாடலுக்கு நடமனாடிய பெண் ஊழியர்கள் சஸ்பெண்ட்


இந்து மத வழிபாட்டு தலத்தில் சினிமா பாடலுக்கு நடமனாடிய பெண் ஊழியர்கள் சஸ்பெண்ட்
x

பெண்கள் 2 பேரும் வழிபாட்டு தலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் இந்து மத கடவுளான சிவனின் மகாகாளிஸ்வரர் வழிபாடு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாகாளிஸ்வரர் வழிபாட்டு தலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வரும் பெண் காவலாளிகள் 2 பேர் வழிபாட்டு தலத்திற்குள் இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடி அதை வீடியோவாக எடுத்துள்ளனர்.

அந்த வீடியோவையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில் இது தொடர்பாக மதவழிபாட்டு தலம் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதனை தொடர்ந்து மத வழிபாட்டு தலத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் ஊழியர்கள் 2 பேரை தனியார் பாதுகாப்பு நிறுவனம் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.
Next Story