எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மாணவர்களிடம் ரூ.1.17 கோடி மோசடி- 4 பேர் கைது


எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மாணவர்களிடம் ரூ.1.17 கோடி மோசடி- 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:46 PM GMT)

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மாணவர்களிடம் ரூ.1.17 கோடி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக மாணவர்களிடம் ரூ.1.17 கோடி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டனர்.

ரூ.1.17 கோடி மோசடி

மும்பையை சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். அந்த மாணவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஒருவர் போன் செய்தார். அந்த நபர், மாணவருக்கு மும்பையில் உள்ள மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மாணவர் மருத்துவ சீட்டுக்காக அந்த நபருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்.

ஆனால் அந்த நபர் சொன்னது போல மாணவருக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினார். மோசடி குறித்து மாணவர் ஜே.ஜே. மார்க் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கும்பல் 4 மாணவர்களிடம் ரூ.1.17 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேற்கு வங்கத்தில் கைது

இதையடுத்து வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற போலீசார் மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆமீர் கான் (வயது29), ஆனந்த் ராஜ் (28), அலி மாலிக் (28), அபிஜித் குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். 4 பேரும் விசாரணைக்காக மும்பை அழைத்து வரப்பட்டனர்.


Next Story