பங்களா வீட்டில் பயங்கர தீ; பெண் பலி- 4 பேர் படுகாயம்


பங்களா வீட்டில் பயங்கர தீ; பெண் பலி- 4 பேர் படுகாயம்
x

கல்யாண் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் தீக்காயமடைந்தனர்.

அம்பர்நாத்,

கல்யாண் பங்களா வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் பலியானார். அவரது மகன் உள்பட 4 பேர் தீக்காயமடைந்தனர்.

திடீர் தீ விபத்து

கல்யாண் அருகே சிஞ்ச்பாடா பகுதியில் உள்ள பங்களா வீட்டில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பங்களா வீட்டில் இருந்த பெண் ஜெயஸ்ரீ மாத்ரே (வயது42), அவரது மகன் மற்றும் 3 பேர் தீயை அணைக்க முயன்றனர். இதில் முடியாமல் போனது. மேலும் வீட்டில் பற்றிய தீ மற்ற இடங்களுக்கு பரவியதால் 5 பேரும் உள்ளே சிக்கினர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். தீ விபத்தில் சிக்கிய 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஜெயஸ்ரீ மாத்ரே தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

பெண் பலி

மேலும் அவரது மகன் மற்றும் 3 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பங்களா வீட்டில் பற்றிய தீயை வீரர்கள் முற்றிலும் அணைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதுகின்றனர்.

இருப்பினும் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தின் போது பலியான பெண்ணின் கணவர் வெளியூர் சென்றிருந்ததாக தெரியவந்தது.


Next Story