100 நாள் வேலையில் எந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்


100 நாள் வேலையில் எந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
x

100 நாள் வேலையில் எந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று செய்யாறு சப்-கலெக்டரிடம் சிவன் வேடம் அணிந்து வந்து விவசாயி மனு அளித்தார்.

திருவண்ணாமலை

தூசி

100 நாள் வேலையில் எந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று செய்யாறு சப்-கலெக்டரிடம் சிவன் வேடம் அணிந்து வந்து விவசாயி மனு அளித்தார்.

சப்-கலெக்டரிடம் மனு

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயி சங்கம் சார்பில் 100 நாள் வேலை தொழிலாளர்கள் மற்றும் விவசாயி ஒருவர் சிவன் வேடமிட்டு மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் சப்-கலெக்டர் அனாமிகாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாய வேலை இல்லாத நாட்களில் கிராம மக்கள் நகரம் நோக்கி இடம் பெயர கூடாது என்பதற்காக 100 நாள் வேலையை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் எந்திரம் புகுத்த கூடாது என்ற சட்டம் உள்ளது.

ஆனால் தற்போது எந்திர பயன்படுத்தப்படுவதாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் 100 நாட்களில் 50 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

இந்த நிதியாண்டு முடிய இன்னும் 40 நாட்களே உள்ளது. எனவே 100 நாள் வேலை திட்ட பணிகளில் எந்திரம் புகுந்தாமல் ஒரே குழுவாக பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், செய்யாறு அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்து 100 நாள் வேலையில் எந்திரங்களை பயன்படுத்துவதை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

பின்னர் விவசாயிகளிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கல்குவாரி

அதேபோல் அனக்காவூர் ஒன்றியம் அரசூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், அரசூரில் இருந்து திருப்பூண்டி கிராமம் செல்லும் வழியில் புதிதாக கல்குவாரி வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்களுக்கு தெரியப்படுத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் கருத்து கேட்பு விளம்பரம் குறித்த அறிவிப்பை கிராம நிர்வாக அலுவலகத்தில் மட்டுமே ஒட்டியுள்ளார்.

கிராமத்தைச் சுற்றி பெரிய ஏரி, சிறிய ஏரி என நீர் நிலைகள் உள்ளன. மேலும் விவசாய நிலங்கள், ஆடு, மாடு மேய்ந்து வாழ்ந்து வரும் இடத்தில் கல்குவாரி வந்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் வீணாகும். எனவே கல்குவாரி அமைக்க கூடாது என கூறப்பட்டிருந்தது.


Next Story