பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது


பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது
x

பெட்டிக்கடையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

போடி தாலுகா போலீசார் இன்று ரோந்து சென்றனர். அப்போது போடியை அடுத்த பொட்டிபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்டிக்கடையில் ராமகிருஷ்ணாபுரம் கீழத்தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 87) மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் போடி குப்பிநாயக்கன்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்ற மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த காசிமாயன் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story