மெர்சல் பிரச்சனை முடிந்து விட்டது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மெர்சல் பிரச்சனை முடிந்து விட்டது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2017 2:40 PM IST (Updated: 24 Oct 2017 2:40 PM IST)
t-max-icont-min-icon

மெர்சல் பட விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்தது விட்டது என தமிழிசை சவுந்தரராஜன் கூறிஉள்ளார்.



கரூர்,


நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம், கடந்த 18–ந் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. 

இந்த திரைப்படத்தில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரிக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்ததால், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அரசியல் களம் சூடு பிடித்தது. மெர்சலில் இடம்பெற்று உள்ள காட்சிகளை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பாரதீய ஜனதா தரப்பில் வழுத்தது. மாறாக எதிர்க்கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மெர்சல் காட்சியை நீக்க எதிர்ப்பு தெரிவித்தன. 

பிரச்சனை தொடர்ந்து நீடித்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் மெர்சல் பட விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்தது விட்டது என கூறிஉள்ளார்.

மத்திய குழு வந்த பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் களையப்பட வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போட்டி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனக்கு தொலைபேசியில் விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன் என தமிழிசை பேசிஉள்ளார். 


Next Story