சென்னையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்


சென்னையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:42 AM GMT (Updated: 3 Nov 2017 4:42 AM GMT)

சென்னையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இந்த தொடர் மழையால் நகர்ப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் 5 மணி நேரம் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. 112 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் மழை ஓரளவு குறைந்ததும் மீண்டும் மின்சாரம் அப்பகுதிகளில் வழங்கப்பட்டது.

நேற்று இரவு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தும் முடங்கியது. நள்ளிரவுக்கு பிறகு ஓரளவு மழை குறைந்தபோதும், இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை பாதிப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னைப் பெருநகர மாநகராட்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து, துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

சென்னையில் மழை நீர் சூழ்ந்துள்ள முடிச்சூருக்கு மாநில பேரிடர் மீட்பு குழு சென்றுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.மக்கள் உதவிகள் பெற சென்னை மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சென்னை மாநகராட்சி - 1913

கட்டுப்பாட்டு அறைகள் - 044-25367823, 25363694, 25362538, 25364965, 25362561, 25369206

வாட்ஸ் அப் எண்கள் - 94454 77662, 94454 77205

காஞ்சீபுரம் மாவட்டம் - 1077

பேரிடர் மேலாண்மை அலுவலகம் - 044- 27237107, 27237207

வாட்ஸ் அப் எண்கள் - 94450 51077, 94450 71077

காஞ்சீபுரம் டிவிசன் - 94451 64756

செங்கல்பட்டு டிவிசன் - 97909 30878

தாம்பரம் டிவிசன் - 99622 28549

மதுராந்தகம் டிவிசன் - 94444 80048

திருவள்ளூர் மாவட்டம் - 1077

திருவள்ளூர் டிவிசன் - 044- 27660248, 9940318661

பொன்னேரி டிவிசன் - 044- 27974073, 8608984066

திருத்தணி டிவிசன் - 044- 27885877, 9994123566

அம்பத்தூர் டிவிசன் - 044- 26541221, 9444555950

பொதுமக்கள் இந்த எண்களில் தொடர்பு கொண்டு, தங்கள் பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Next Story