தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம்


தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம்
x
தினத்தந்தி 30 Nov 2017 11:00 PM GMT (Updated: 30 Nov 2017 9:44 PM GMT)

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஒடிசாவுக்கு தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 2002–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 3 ஆண்டுகளுக்கு ஒடிசா மாநிலத்தில் பணி அமர்த்தப்படுகிறார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த மாநிலத்துக்குச் செல்லும் அவர், அங்கு பதவி ஏற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ ஒடிசாவில் பணியில் இருப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story