ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 1 Dec 2017 7:49 AM GMT (Updated: 1 Dec 2017 7:49 AM GMT)

ஆர்.கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சென்னை,

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, டிடிவி தினகரன் இடையே என மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் பிற்பகல் 1 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

வேட்பு மனு தாக்கலின் போது, தினகரனின் தீவிர ஆதரவாளரான வெற்றிவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு வருகை தந்த டிடிவி தினகரன், புதிய கொடியுடன் வருகை தந்தார். தினகரனின் ஆதரவாளர்கள் அண்ணா உருவம் இல்லாத கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியுடன் டிடிவி தினகரனை அழைத்து வந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. 

Next Story