எதிர்க்கட்சிகளின் புலம்பல்களுக்கு மத்தியிலேயே சாதனை சகாப்தத்தினை உருவாக்கி வருகிறோம்; முதல் அமைச்சர் பேச்சு


எதிர்க்கட்சிகளின் புலம்பல்களுக்கு மத்தியிலேயே சாதனை சகாப்தத்தினை உருவாக்கி வருகிறோம்; முதல் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2017 1:37 PM GMT (Updated: 3 Dec 2017 1:37 PM GMT)

எதிர்க்கட்சிகளின் புலம்பல்களுக்கு மத்தியிலேயே சாதனை சகாப்தத்தினை உருவாக்கி வருகிறோம் என முதல் அமைச்சர் பழனிசாமி கோவையில் பேசியுள்ளார்.

கோவை,

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, மீனவர்கள் மீட்கப்படவில்லை என பொய்யான தகவலை சிலர் கூறி வருகின்றனர்.

வருவாய் துறை, மீன்வள துறையினர் 44 கிராம மக்களை சந்தித்து கணக்கெடுப்பு பணி நடத்தியுள்ளனர். மீனவர்களை மீட்கும் பணியில் மீன்வள துறை மந்திரி ஜெயக்குமார் ஈடுபட்டு உள்ளார்.

அனைத்து நடவடிக்கைகளையும் அரசானது முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. ஓரிரு நாளில் மின்விநியோகம் சீரடையும். மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள துணை முதல் அமைச்சரும் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் புலம்பல்களுக்கு மத்தியிலேயே சாதனை சகாப்தத்தினை உருவாக்கி வருகிறோம் என பேசியுள்ளார்.


Next Story