ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
x
தினத்தந்தி 16 Dec 2017 4:45 AM IST (Updated: 16 Dec 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நாவலன் நகர், திடீர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரி

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நாவலன் நகர், திடீர் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், பேசியதாவது:–

தற்போதைய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூழ்நிலைக்கு ஏற்ப கூடு விட்டு கூடு பாயும் வல்லமை படைத்தவர். உதாரணமாக கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டி.டி.வி.தினகரனுக்கு வாக்கு சேகரித்தார். தற்போது டி.டி.வி.தினகரனை எதிர்த்து நின்ற மதுசூதனனை ஆதரித்து தற்போது இந்த இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். தி.மு.க.வை வழிநடத்தும் திறமையான செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். வருகிற சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். அதற்கு நுழைவு வாயிலாக தற்போது இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி அமையும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் களத்தில் இறங்கி பணப்பட்டுவாடாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபடும். ஆர்.கே.நகர் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரியான தொகுதியாக மாற்ற தி.மு.க. வேட்பாளர் மருது கணேசுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story