திருப்பதி அருகே செம்மரக்கடத்தல்; 5 தமிழர்கள் கைது


திருப்பதி அருகே செம்மரக்கடத்தல்; 5 தமிழர்கள் கைது
x
தினத்தந்தி 17 Feb 2018 1:43 AM GMT (Updated: 17 Feb 2018 1:43 AM GMT)

திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டனர் என கூறி 5 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல உதவி ஆய்வாளர் வாசு தலைமையிலான குழு செம்மரக்கடத்தலை தடுப்பதற்காக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், அந்த பகுதியில் சிலர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.  அவர்களை தடுப்பதற்காக போலீசார் வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

அவர்களில் செம்மரங்களை வெட்டி கடத்தினர் என தமிழர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  போலீசார் வருவதனை அறிந்த 15 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.


Next Story