காவிரி விவகாரம் குறித்து முழுவதும் அறியாமல் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது-ஸ்டாலின்


காவிரி விவகாரம் குறித்து முழுவதும் அறியாமல் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது-ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Feb 2018 7:56 AM GMT (Updated: 18 Feb 2018 7:59 AM GMT)

காவிரி விவகாரம் குறித்து முழுவதும் அறியாமல் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின்கூறியுள்ளார். #CauveryIssue #MKStalin

சென்னை,

காவிரி பிரச்சினையில் திமுக எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி செயல் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:
 
காவிரி விவகாரம் குறித்து முழுவதும் அறியாமல் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. காவிரி ஒப்பந்தம் 1974ல் மறுஆய்வு செய்யப்படாததால்தான் தமிழக உரிமை பறிபோய்விட்டது என முதல்வர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. தமிழகத்தின் காவிரி உரிமை திமுக ஆட்சிக் காலத்தில் தான் நிலைநாட்டப்பட்டது என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் திமுக அரசின் சாதனையை அதிமுக சாதனையாக அபகரிக்க முயல்வது அழகல்ல; திமுக மீது பழிபோட்டு உண்மைக்கு மாறானதைச் சொல்ல நினைப்பது ஒரு முதல்வருக்கு அழகல்ல.

காவிரி பிரச்சினையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

தமிழகத்தின் காவிரி உரிமையை பறிகொடுக்க, முதல்-அமைச்சர் பழனிசாமி அரசு தான் காரணம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story