பாஜகவின் தூண்டுதலால் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு


பாஜகவின் தூண்டுதலால் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Feb 2018 11:46 AM GMT (Updated: 18 Feb 2018 11:46 AM GMT)

பாஜகவின் தூண்டுதலால் தான் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #TTVDhinakaran #BJP #OPanneerselvam

சென்னை,

இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார். பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாஜகவின் முகவராக செயல்பட்டு வருகிறார். சசிகலா நினைத்திருந்தால் தமிழக முதலமைச்சராகி இருப்பார். சிகலாவை முதலமைச்சராக்க வேண்டுமென்று பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story