அண்ணாநகர் டவர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு மாறி மாறி கத்தியால் குத்திகொண்டனர்


அண்ணாநகர் டவர் பூங்காவில் காதலர்களுக்குள் தகராறு மாறி மாறி கத்தியால் குத்திகொண்டனர்
x
தினத்தந்தி 20 Feb 2018 11:22 AM GMT (Updated: 20 Feb 2018 12:18 PM GMT)

பூங்காவில் காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் மாறி மாறி கத்தியால் குத்திகொண்டனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். #TamilNews

சென்னை

சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில்   ஒரு காதலனுக்கும் காதலிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில்  கோபம் அடைந்த   காதலன் காதலியை கத்தியால் குத்தி உள்ளார். பின்னர் காதலன் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இதில் குத்துப்பட்ட காதலன் ராஜேஷ் சோழவரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இருவரும் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story