பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் - கமல்ஹாசன் அழைப்பு


பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் -  கமல்ஹாசன்  அழைப்பு
x
தினத்தந்தி 24 Feb 2018 3:19 PM GMT (Updated: 24 Feb 2018 3:19 PM GMT)

பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்று தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வேடிக்கை மனிதர்களை விட, வேடிக்கை பார்ப்பவர்கள் தான் அதிகம் நாட்டில் பார்வையாளர்கள் அபாயம் உள்ளது. தமிழகத்தில் சில சாலைகளில் மின்சார அபாயம் என்ற பலகையை பார்க்கலாம். அதே போல் தமிழ்நாட்டிற்கு பார்வையாளர்களின் அபாயம் என்ற பலகையை வைக்கலாம். பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம். நானும் முதலில் வேடிக்கை பார்ப்பவனாக இருந்தேன். ஆனால் முடியவில்லை.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Next Story