மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு


மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி உயிரிழப்பு
x
தினத்தந்தி 27 Feb 2018 4:07 AM GMT (Updated: 27 Feb 2018 4:07 AM GMT)

மதுரையில் தீ வைத்து எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

மதுரை,

மதுரையில் அச்சம்பட்டியில் காதலிக்க மறுத்ததற்காக பள்ளி மாணவி சித்ராதேவி என்பவர் மீது பாலமுருகன் என்பவர் கடந்த 16ந்தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மாணவிக்கு 74 சதவீத அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பலத்த தீக்காயமுற்ற மாணவி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  ஆனால் தீ காயத்தின் சதவீதம் அதிக அளவில் இருந்த நிலையில், தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சை பலனின்றி மாணவி இன்று உயிரிழந்து உள்ளார்.


Next Story