ஜெயேந்திரரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்


ஜெயேந்திரரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 28 Feb 2018 6:10 AM GMT (Updated: 28 Feb 2018 6:10 AM GMT)

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார். #KanchiSeer #NarendraModi #PMModi

சென்னை

காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் (வயது 82) இன்று காலமானார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு  ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின்  மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.

லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களிலும், மனங்களிலும், அவரது  முன்மாதிரியான சேவை மற்றும் மிகுந்த எண்ணங்கள் ஆகியவற்றின் காரணமாக  வாழ்கிறார். அவரது  ஆத்மா சாந்தியடையட்டும். 

ஜகத்குரு பூஜ்யா ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா ஏராளமான சமூக சேவைசெய்யும் முயற்சிகளில் முன்னணியில் இருந்தார். அவர் ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்க பல அமைப்புகளை தொடங்கினார்.


Next Story