திருப்பூரில் வெடி மருந்து கடையில் பயங்கர தீ விபத்து


திருப்பூரில்  வெடி மருந்து கடையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 21 March 2018 10:29 AM GMT (Updated: 21 March 2018 10:29 AM GMT)

திருப்பூரில் வெடி மருந்து கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர்.

திருப்பூர்

திருப்பூரில்  ஈஸ்வரன்கோயில் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ்தளத்தில் வெடிமருந்து விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வெடி உப்பு, வெடி மருந்து மற்றும் பல வெடி வேதிப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடையில் இருந்த வேதிப்பொருட்கள் வெடித்து சிதறின. வெடிமருந்து கடையில் இருந்து வெடித்து சிதறிய தீ அக்கம்பக்கத்தில் உள்ள கடைகளுக்கும் பரவியது. மேலும் வெடி மருந்துகள் வெடித்து சிதறியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த தீ விபத்தால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story