காவிரி விவகாரம்: தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டம்


காவிரி விவகாரம்:  தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 3:22 AM GMT (Updated: 25 March 2018 3:31 AM GMT)

தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. காவிரி விவகாரத்திற்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். #TTVDinakaran

தஞ்சாவூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு 6 வார கால அவகாசம் அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதற்காக 9 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக ஆர்.கே. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன் இன்று தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, தமிழக மக்கள் போராடியே காவிரி மேலாண்மை வாரியம் பெற வேண்டும்.  கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.

மத்திய அரசு ஆனது மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என கூறி தமிழகத்தினை சோமாலியாவாக ஆக்க முயற்சிக்கிறது.  மத்திய அரசால் தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.


Next Story