தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று 118 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்


தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று 118 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்
x
தினத்தந்தி 26 March 2018 6:32 AM GMT (Updated: 26 March 2018 6:32 AM GMT)

தி.மு.க. மண்டல மாநாட்டில் இன்று 118 ஜோடிகளுக்கு தி.மு.க செய்லதலைவர் மு.க.ஸ்டாலின் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். #DMK #MKStalin

ஈரோடு, 

ஈரோடு அருகே உள்ள பெருந்துறை சரளையில் கடந்த 2 நாட்களாக தி.மு.க. மண்டல மாநாடு நடந்து வந்தது.   இன்று (திங்கட்கிழமை) காலை மாநாடு பந்தலில் 117 ஜோடிகளுக்கு மு.க.ஸ்டாலின் சுயமரியாதை இலவச திருமணங்களை நடத்தி வைத்தார்.  மு.க.ஸ்டாலின் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுக்க அதை மணமகன் மணப்பெண் கழுத்தில் கட்டினார்.

மணமக்கள் தாலி கட்டி கொண்டு மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். அவர்கள் மீது பூக்கள்தூவி வாழ்த்தி ஸ்டாலின் மணமக்களுக்கு இலவச சீர் வரிசை பொருட்களையும் வழங்கினார்.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மணமக்கள் ஜோடி ஜோடியாக வந்து மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு மணமக்களுக்கும்  பவுன் தாலிசெய்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story