இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு
x
தினத்தந்தி 31 March 2018 12:10 PM GMT (Updated: 31 March 2018 12:10 PM GMT)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை, 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 28 ஆம் தேதி துவங்கியது. இந்த மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி உட்பட முன்னணி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விதியின்படி அக்கட்சியின் அமைப்புகளுக்கான மாநாடு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாடுகளில் விவாதிக்கப்படும்.

அந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 28 ஆம் தேதி துவங்கி   வரும் 31-ம் தேதி (இன்று) வரை நடைபெற்றது.  மன்னார்குடி பின்லே பள்ளி மைதானம் எதிரே அமைக்கப்பட்டுள்ள அரங்கில், மாநாடு நடைபெற்றது.  மாநாட்டின் நிறைவு நாளான இன்று, அடுத்த 3 ஆண்டுகளுக்கான மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 


Next Story