நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம்


நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம்
x
தினத்தந்தி 1 April 2018 9:45 PM GMT (Updated: 1 April 2018 9:34 PM GMT)

நாடாளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆலந்தூர்,

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அவையை நடத்தவிடமாட்டோம். மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. எங்களுடன் பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த விதமான தொடர்பும் கிடையாது.

ஜல்லிக்கட்டுக்காக மக்கள் எழுச்சி பெற்று தமிழகமே எப்படி கொதித்து எழுந்ததோ?, அதுபோல காவிரி பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, கட்சி பாகுபாடு பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் கருதி மக்கள் இயக்கமாக மாறி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். காங்கிரஸ் ஆதரவு தந்தால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்கிறோம். ஸ்டாலின் வேண்டுகோள்படி காவிரி பிரச்சினைக்காக காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story