சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக எம்.கே. சூரப்பா நியமனம்; ஆளுநர் உத்தரவு


சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக எம்.கே. சூரப்பா நியமனம்; ஆளுநர் உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2018 3:11 PM GMT (Updated: 5 April 2018 3:11 PM GMT)

சென்னை அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக எம்.கே. சூரப்பா ஆளுநரால் இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #AnnaUniversity

சென்னை,

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம்.  இவரது பணி காலம் கடந்த 2016 மே 26ல் நிறைவடைந்தது.  இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு 2 வருடங்களாக துணைவேந்தர் யாரும் நியமிக்கப்படாத நிலையில், துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று நியமித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் துணைவேந்தராக அவர் 3 ஆண்டுகள் இருந்திடுவார்.  இவர் ஐ.ஐ.டி. இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றியவர்.  இந்திய அறிவியல் நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார்.

உலோக பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சூரப்பா, 150 ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.  தனது 4 ஆய்வு கட்டுரைகளுக்கு காப்புரிமையும் பெற்றுள்ளார்.


Next Story