ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்: டிடிவி தினகரன்


ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 6 April 2018 5:52 AM GMT (Updated: 6 April 2018 5:52 AM GMT)

ஐபிஎல் போட்டிகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #IPL #TTvdhinakaran

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காததை கண்டிக்கும் வகையில்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க கூடாது என்று அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ஐபிஎல் பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி அதிக அளவில் பதிவுகள் பகிரப்படுகின்றன. 

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்கள்  புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட்  ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து உள்ளார்.

Next Story