திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்தபோதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம் - விஜயகாந்த்


திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்தபோதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம் - விஜயகாந்த்
x
தினத்தந்தி 6 April 2018 3:53 PM GMT (Updated: 6 April 2018 3:53 PM GMT)

திமுக போராடாமல் ராகுல் காந்தியை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்க சொன்னாலே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என விஜயகாந்த் கூறிஉள்ளார். #Vijayakanth #CauveryMangementBoardசென்னை,


மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

அரசியல் கட்சியினரும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் சாலை மறியல், ரெயில் மறியல்களில் அணி, அணியாக பங்கேற்று கைதாகி வருகிறார்கள். வணிகர்கள் கடைகளை மூடி முழு அடைப்பிலும் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக தரப்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி பிரச்னையில் பிறகட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டிஉள்ளார். 

காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரதம் இருந்து நாடகம் நடத்துகிறது. திமுக நினைத்திருந்தால் ஆட்சியில் இருந்தபோதே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். காவிரி பிரச்னையில் பிறகட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன. திமுக போராடாமல் ராகுல் காந்தியை சந்தித்து சித்தராமையாவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொன்னாலே காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடும் என கூறிஉள்ளார் விஜயகாந்த்.

Next Story