“நீட்” பலிகளுக்கு மக்கள் கண்டிப்பாக பதில்தருவார்கள் நடிகா் விஷால் ஆவேசம்


“நீட்” பலிகளுக்கு மக்கள் கண்டிப்பாக பதில்தருவார்கள் நடிகா் விஷால் ஆவேசம்
x
தினத்தந்தி 6 May 2018 9:02 AM GMT (Updated: 6 May 2018 9:02 AM GMT)

நீட் தேர்வெழுத மகனை கேரளா அழைத்துச்சென்ற தந்தை மரணத்திற்கு நடிகா் விஷால் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். #Vishal

சென்னை,

இன்று நீட் தேர்வு எழுதுவதற்காக தன்னுடைய மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் காலமானார். இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினா் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனா். மேலும், நடிகா் சங்க தலைவரான விஷால் இந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவா் கூறுகையில்,“அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதில் கொடுப்பார்கள்”  என்றும் “கஸ்தூரி மகாலிங்கத்தை மருத்துவராக்கி தந்தை கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் அனைவரின் கடமை” என்று உருக்கமாக தெரிவித்தார்.

இந்நிலையில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார். 

Next Story