2016-17ல் 32 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.321.03 கோடி ;3-வது இடத்தில் அ.தி.மு.க


2016-17ல் 32 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.321.03 கோடி ;3-வது இடத்தில் அ.தி.மு.க
x
தினத்தந்தி 23 May 2018 5:50 AM GMT (Updated: 23 May 2018 5:50 AM GMT)

இந்தியாவில் 2016-17ல் 32 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ. 321.03 கோடியாகும். முதல் இடத்தில் சமாஜ்வாதி கட்சியும் , 3-வது இடத்தில் அ.தி.மு.கவும் உள்ளன. #ECI

புதுடெல்லி

2014 ஆம் ஆண்டில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI), அனைத்து அரசியல் கட்சிகளும் கமிஷனுக்கு நிதியளிக்கும் தணிக்கை அறிக்கைகளின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தேர்தல் கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த தணிக்கை அறிக்கையை  ஜனநாயக சீர்திருத்த சங்கம் பகுப்பாய்வு செய்து கூறி இருப்பதாவது:-

* 2016-17ல் 32 மாநில கட்சிகளின்  மொத்த வருவாய் 321.03 கோடியாகும்.

*  சமாஜ்வாதி கட்சி ரூ.82.76 கோடி  அதிக வருவாயைப் பெற்றுள்ளது. இது 32 மாநில கட்சிகளின் மொத்த வருவாயில் 25.78 சதவீதமாகும்.

* அடுத்த இடத்தில் ரூ. 72.92 கோடி வருவாயுடன் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது.

*   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன் வருவாய் ரூ. 48.88 கோடியாக இருந்தது.

* ஆம் ஆத்மி கட்சி,  ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி,  ராஷ்ட்ரிய ஜனதா தளம்  உள்பட  16 மாநில கட்சிகளின் வருவாய்  தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கவில்லை.

* 32 பிராந்தியக் கட்சிகளில், 14 கட்சிகள் 2015-16 முதல் 2016-17 வரையிலான வருவாயில் குறைந்து உள்ளது, அதே நேரத்தில் 13 கட்சிகளின்  வருவாய் அதிகரித்துள்ளது.

* ஐந்து  மாநில கட்சிகள் 2015-16 நிதியாண்டில் தங்கள் வருமான வரி ரிட்டனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கவில்லை.

* 27 மாநில கட்சிகளின்  மொத்த வருவாய் 2015-16 ல் ரூ. 291.14 கோடியிலிருந்து 2016-17 ஆம் ஆண்டில் ரூ.316.05 கோடியாக உயர்ந்துள்ளது.

* தி.மு.க., தனது வருமானத்தை விட கூடுதலாக  ரூ.81.88 கோடி செலவு செய்துள்ளதாக கூறி உள்ளது.

* சமாஜ் வாதி மற்றும் அ.இ.அ.தி.மு.க., மொத்த வருவாயை விட ரூ 64.34 கோடியும்,  ரூ. 37.89 கோடியும் செலவு செய்து  உள்ளன என அறிவித்துள்ளன. 

 * அதிகபட்சமாக  சமாஜ்வாடி கட்சி 147.1 கோடி ரூபாயும் , அ.இ.அ.தி.மு.க. ரூ.86.77 கோடியும், தி.மு.க. ரூ85.66 கோடி ரூபாயும் செலவழித்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Next Story