தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்


தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்
x
தினத்தந்தி 26 May 2018 6:28 AM GMT (Updated: 26 May 2018 6:28 AM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கூறினர். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை  மூடக்கோரி  நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது இதில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தூத்துக்குடி துபாக்கி சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .

இதில் இயக்குநர் பா.ரஞ்சித், சசிகுமார், பாலாஜி சக்திவேல், ராஜீவ் முருகன் மற்றும் பல ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொல்லப்பட்ட மக்கள் அனைவரும் எளிமையானவர்கள் என்றும் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டனத்துக்குரியது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.

Next Story