சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் டுவீட்


சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு: வரலாற்று சிறப்புமிக்கது - மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 28 Sep 2018 9:08 AM GMT (Updated: 28 Sep 2018 9:08 AM GMT)

சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #Sabarimalatemple

சென்னை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி பல வருடமாக வழக்கு நடந்து வருகிறது. மிக நீண்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில்  சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். 

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று  மாறுபட்ட தீர்ப்பு  வழங்கினார்.

இந்தநிலையில், சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு  குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்' என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. சமூக நீதி - பாலின சமத்துவம் - பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு மைல்கல்.

என பதிவிட்டுள்ளார்.

Next Story