தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்


தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்
x

தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது

சென்னை

இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.அரசு தரப்பில்  இந்த சந்திப்பு  மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவிக்கப்பட்டது.

 இந்த சந்திப்பிற்கு பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மாளிகையில் அவர், ஆளுநர், பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசித்தார்.

இந்த நிலையில் இந்த சந்திப்புகள்  முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை ராஜ்பவனில் வைத்து சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருடன் சந்தித்தது, பிறகு ஆளுநரை சந்தித்ததையடுத்து, முதல்வரும் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்பதுதான் அந்த தகவல். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பது தொடர்பாக மோடியிடம் எடப்பாடி பேசுவார் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Next Story